புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா கீழி ஏம்பல் கிராமத்தில் வசித்து வரும் அடிதட்டு மக்கள் ஏழை எளிய பொதுமக்கள் எனவும் 50 ஆண்டு காலமாக இப்பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு சாலை வசதி குடிநீர் வசதி மின்சார வசதி மயான சாலை குளம் போன்ற வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை எனவும் பல்வேறு கட்டங்களில் உயர் அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் அருணாவை சந்தித்து புகார் மனு வழங்கிய பிறகு செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன் ஏழை எளிய பொதுமக்களின் கோரிக்கையை மாவட்ட நிர்வாகம் செய்து தராவிட்டால் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தலைமையில் மாவட்டத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.