புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்தித்த புதுக்கோட்டை மாவட்ட ரியல் எஸ்டேட் அதிபர்கள் சங்கத்தினர் புதுக்கோட்டை நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக தற்போது தரம் உயர்த்தப்பட்டு இருப்பதாகவும் ஆனால் நகராட்சி பகுதிகளோடு கிராமப்புற பகுதியில் இணைக்கப்பட்டு அப்பகுதியில் வாழும் பொதுமக்களின் விருப்பம் இல்லாமல் அப்பகுதிகளில் தமிழக அரசு நில மதிப்பை உயர்த்திருப்பதாகவும் இது சட்டவிரோத செயல் எனவும் எனவே தமிழக அரசு உடனடியாக உயர்த்தப்பட்ட நில மதிப்பை வாபஸ் பெற வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

மேலும் இதனை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணாவை அவரது அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர் புதுக்கோட்டை மாவட்ட ரியல் எஸ்டேட் அதிபர்கள் சங்கத்தினர்.