நாகர்கோவில் மாவட்ட தலைமை கழக அலுவலகத்தில் வைத்து குமரி மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் தலைமையில், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் நாகர்கோவில் மகேஷ்.பி . ஏ. பி. எல் அவர்களின் முன்னிலையில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட ஒன்றிய, நகர, பகுதி கழக விளையாட்டு மேம்பாட்டு அணிகளின் நிர்வாகிகளின் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்..

கூட்டத்தில் கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு தளபதி யார் அவர்கள் தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும், தமிழ்நாடு மாநில இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும் வெளிநாட்டு முதலீடுகளை இருப்பதற்காக ஜெர்மன் மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பலகோடி ரூபாய் முதலீடுகளைப் பெற்று அதிகப்படியான வேலை வாய்ப்புகளை உருவாக்கி தந்தமைக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் நாள் கரூரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் பெரியார் விருதினை பெற்ற கழகத் துணை பொது செயலாளர் கழக நாடாளுமன்ற குழு தலைவரும் மண்டல தேர்தல் பொறுப்பாளருமான திருமதி கனிமொழி கருணாநிதி எம்பி அவர்களுக்கு இக்கூட்டம் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதியார் அவர்களின் மாப்பிள்ளை மரியாதைக்குரிய சபரீசன் அவர்களின் தந்தை பெரியவர் வேதமுத்து மறைவிற்கு இக்கூட்டம் இரங்கல் தெரிவித்துக் கொள்கிறது.(ஒரு நிமிடம் மெளன அஞ்சலி நிர்வாகிகள் செலுத்தினர்).

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாள் வரும் நவம்பர் மாதம் 27ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு விளையாட்டு மேம்பாட்டு அணையின் கிழக்கு மாவட்டம் சார்பில் மாவட்டச் செயலாளர் மாநகர மேயருமான நாகர்கோவில் வழக்கறிஞர் மகேஷ் அவர்கள் ஆலோசனைபடி பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் பல்வேறு போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஏழை ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க தீர்மானிக்கப்பட்டது.கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட நாகர்கோவில், கன்னியாகுமரி, குளச்சல் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் கழக தலைவர் சுட்டிக்காட்டும் வேட்பாளரை அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

விளையாட்டு மேம்பாட்டு அணியின் துணை அமைப்பாளர்கள் ஜென்சன் ரோச், சுந்தரம், மாணிக்க ராஜா, மாநகர அமைப்பாளர் வழக்கறிஞர் N. ராமதாஸ், தலைவர் முகமது உசேன், துணை தலைவர் மால்டன் ஜினின், துணை அமைப்பாளர்கள் சிபன், ரமேஷ், மணிகண்டன், ஜஸ்டின் பாஸ்சர், ஒன்றிய அமைப்பாளர்கள் ராஜேஷ், சுந்தர் சிங், சுடலை மணிகண்டன், பாக்கிய மணி, பிரைட்டன், ஜெய்வின் ராஜா, அபிஷேக், நகர அமைப்பாளர்கள் சர்சில் மார்டின், கமலநாதன் மற்றும் துணை அமைப்பாளர்கள், நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.