யானைமலை கிரீன் பவுண்டேஷன் சார்பாக 233 ஆவது வார மரக்கன்றுகள் நடும் விழா ஒத்தக்கடை ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது. யானைமலை கிரீன் பவுண்டேஷன் ஆலோசகர் பிரபு முன்னிலை வகித்தார். இளம் உறுப்பினர் கபிலன் வரவேற்றார்.
உறுப்பினர் பாஸ்கரன் தொகுத்து வழங்கினார். தலைமை ஆசிரியர் தென்னவன்
மரங்களின் பயன்கள், மருத்துவ குணங்கள், மண்ணின் மரங்கள், காலநிலை மாற்றம் ஆகியவை குறித்து உரை நிகழ்த்தினார். வேப்ப மரம், புங்க மரம், கொய்யா மரம், சாத்துக்குடி மரம் முதலிய மரங்கள் நடப்பட்டன. மரக்கன்றுகளுக்கு கவாத்து பணி, பராமரிப்பு பணி, களப்பணி முதலியன நடைபெற்றது.

நிகழ்விற்கு தேவையான வேம்பு, புங்கை முதலிய மரக்கன்றுகளை பசுமை சாம்பியன் அசோக்குமார் வழங்கினார். நீர் ஊற்றப்பட்டது. ‘மரம் வளர்ப்போம்; மழை பெறுவோம், இயற்கையைக் காப்போம்’ என்ற உறுதிமொழி ஏற்கப்பட்டது. விழாவில் யானைமலை கிரீன் பவுண்டேஷன் ஆலோசகர்கள், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், மீனாட்சி தட்டச்சு உரிமையாளர் ஜெயபாலன், மாற்றம் தேடி சமூக நல அறக்கட்டளை நிறுவனர் பாலமுருகன், பரமேஸ்வரன் உறுப்பினர்கள் ரமேஷ், ஸ்டெல்லா மேரி, வெண்பா, பாலாமணி, பிரசீத், நலினா, ரூபன் , பாலமுருகன், ஜெய்சீத், மற்றும்
உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் கைகளால் மரக்கன்றுகள் நடப்பட்டன. பொது மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. நிகழ்வில் பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு களப்பணி செய்தனர். மாணவி அரிய நட்சத்திரா நன்றி கூறினார்.