தமிழக வெற்றிக்கழக தலைவரும் நடிகருமான விஜய் கடந்த சனிக்கிழமை மக்கள் சந்திப்பு இயக்கத்தை திருச்சியில் துவங்கினார் அதனைத் தொடர்ந்து வருகின்ற 20 ஆம் தேதி சனிக்கிழமை நாகை மாவட்டத்தில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

விஜய் வருகையை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்ட தமிழக வெற்றி கழகம் மாவட்ட செயலாளர் சுகுமார் தலைமையில் காவல் கண்காணிப்பாளரிடம் ஏழு இடங்களில் அனுமதி கேட்டு அனுமதிக்கப்பட்டது திருச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் போல் நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஏற்படக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு அனைத்து கட்ட ஆய்வுகளும் மேற்கொண்ட பிறகு அனுமதி வழங்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் இன்று காலை தமிழக வெற்றி கழக கட்சியின் தலைமை நிலைய செயலாளர் சாரதி உள்ளிட்ட நிர்வாகிகள் ஏழு இடங்களில் ஒரு இடமான புத்தூர் ரவுண்டானா பகுதியை தேர்வு செய்து காவல்துறையிடம் அனுமதி கேட்டிருந்தனர் இதற்கு பல கட்ட நிபந்தனைக்கு உட்பட்டு காவல்துறை சார்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு வருகை தரும் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்க்கு நாகூர் வாஞ்சூர் ரவுண்டானாவில் வரவேற்பு அளிக்கப்பட்டு, நாகூர் நகரில் நுழைந்து அமிர்தா வித்யாலயா சாலை வழியாக கிழக்கு கடற்கரை சாலையை கடக்க வேண்டும் எனவும்
பின்னர் புத்தூர் ரவுண்டானாவில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பேசுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
சிக்கல், கீழ்வேளூர் வழியாக தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்தை சென்றடைவார்
திருச்சி பகுதியில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் தமிழக வெற்றி கழகத் தொண்டர்களால் இடையூறு ஏற்பட்ட நிலையில் நாகை நகருக்குள் அனுமதி மறுப்பு அளிக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.
இருப்பினும் கிழக்கு கடற்கரை சாலையை பயன்படுத்தி பிரச்சாரத்தை மேற்கொள்ள காவல் துறை நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது.
கூட்டம் அதிகமாக இருப்பதால் தன்னார்வலர்களை அமைத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் தமிழக வெற்றிக்கழகத்தினர் ஏற்பாடு செய்து கொள்ளவும் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் கட்சியினருக்கு அறிவித்துள்ளார். சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற சந்திப்பிற்கு பிறகு அனுமதிய அளிக்கப்பட்டுள்ளது.