கன்னியாகுமரி காவல் நிலையம் வாளாகத்தில் காவலர் நல ஆவின்
பாலகம் கட்டிட பணியை குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சர்வதேச சுற்றுலா பகுதியான கன்னியாகுமரி வரும் காவலர்கள் குடும்ப இன்ப சுற்றுலா வரும் காவல்துறை குடும்பத்தினர் தங்கும் விடுதியை, கன்னியாகுமரி காவல் நிலையம் வளாகத்தில் அண்மையில் திறந்து வைத்தார். குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின்.
இதனை தொடர்ந்து இன்று ((செப்டம்பர்_16)ம் நாள். காவலர் நல ஆவின் பாலகம் அமைக்க,புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெற்றது.

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர். ஸ்டாலின் அடிக்கல் நாட்டி,புதிய
கட்டிடத்திற்கான பணியை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் கன்னியாகுமரி துணை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் மற்றும் காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள் காவலர்கள் கலந்துகொண்டார்கள்.