• Thu. Jan 15th, 2026
[smartslider3 slider="9"] Read Now

ஆப்கானிஸ்தானுக்கு உதவி இந்தியா.. நன்றி தெரிவித்த தாலிபன்கள்

Byமதி

Dec 13, 2021

கடந்த சனிக்கிழமையன்று டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் 1.6  மெட்ரிக் டன்  உயிர் காக்கும் மருத்துவ கருவிகளை ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா வழங்கிய உள்ளது.

அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருக்கும்போதே ஆப்கானிஸ்தான் கடும் பொருளாதார பாதிப்பில் சிக்கியிருந்தது. தலிபான்கள் கைகளுக்கு சென்ற பின்னர் நிலைமை மேலும் மோசமாகி வருகிறது. குறிப்பாக குழந்தைகள் போதிய ஊட்டச்சத்து கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், 1.6  மெட்ரிக் டன்  உயிர் காக்கும் மருத்துவ கருவிகளை ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா வழங்கியது.

இதற்கு நன்றி தெரிவித்த ஆப்கானிஸ்தான், இந்தியாவுக்கான ஆப்கானிஸ்தான் தூதர் ஃபரித் மாமுண்ட்சாய் ட்விட்டரில், இந்த இக்கட்டான நேரத்தில் பல ஆப்கானிய குடும்பங்களுக்கு இந்த உதவி உதவும்.. நன்றி என தெரிவித்துள்ளார்.