• Fri. Jan 16th, 2026
[smartslider3 slider="9"] Read Now

மத்திய அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டில் ஓர் இனிப்புச் செய்தி..!

Byவிஷா

Dec 13, 2021

புத்தாண்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் ஒரு இனிப்பான செய்தி காத்திருக்கிறது. 2022 ஜனவரியில் அகவிலைப்படி மீண்டும் ஒருமுறை அதிகரிக்கும் என கூறப்படுகின்றது. இதன் காரணமாக ஊழியர்களின் சம்பளம் மீண்டும் அதிகரிக்கும்.


இருப்பினும், 2022 ஜனவரியில் அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கப்படும் என்பது இன்னும் தெளிவாக முடிவு செய்யப்படவில்லை. ஆனால், AICPI குறியீட்டின் தரவுகளின்படி, இது 3சதவிகதமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


டிசம்பர் 2021 இறுதிக்குள் மத்திய அரசின் சில துறைகளில் பதவி உயர்வுகள் இருக்கும் என்று கூறப்படுகின்றது. இது தவிர, 2022 ஆம் ஆண்டின் பட்ஜெட்டுக்கு முன்னர் ஊழியர்களின் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் பற்றியும் ஒரு முடிவு எடுக்கப்படும். இவை நடந்தால், ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளமும் அதிகரிக்கும். அகவிலைப்படியைப் பற்றி AICPI குறியீட்டின் தரவு மூலம் என்ன தெரிந்துகொள்ள முடிகிறது என பார்க்கலாம்.
அகவிலைப்படி AICPI தரவுகளின் அடிப்படையில் ளால் தீர்மானிக்கப்படும்.