பழைய ஏழரயிரம்பண்ணையில் முப்பது வருடங்களுக்கு முன்பு சாக்கடை வாறுகால் கட்டப்பட்டது. தொடர்ந்து சாலையின் உயரம் அதிகரிக்கப்பட்டது. இதனால் கழிவு நீர் வாறுகாலில் மண் மூடியது செடிகளும் தொடர்ந்து வளர்ந்தது.

இதனை அகற்றப்படாததால் தற்போது புதர் போல் ஆகிவிட்டது. இதனால் பழைய ஏழாயிரம்பண்ணை தெருகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் கடந்து செல்ல முடியாமல் இப்பகுதியில் தேங்கி விட்டது. இதனால் துர்நாற்றம் காரணமாக சுகாதாரக் கேடு ஏற்பட்டு வருகிறது. அருகில் பர்சனல் கோவில் இருப்பதால் பயன்களும் சிரமப்பட்டு ஆகையால் வளர்ந்துள்ள செடிகளை அப்புறப்படுத்த வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.

மழைக்காலம் தொடங்கி இருப்பதால் வாறுகளில் கூடுதலாக தண்ணீர் தேங்க வாய்ப்புள்ளது. இதன் மூலம் நோய் பரவும் வாய்ப்புள்ளது.ஆகையால் உடனடியாக வாறுகலில் மணல் , புதர் செடிகளையும் முழுமையாக அப்புறப்படுத்தி சாக்கடை கழிவுநீர் தடையில்லாமல் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.