மதுரை மாநகர் பழங்காநத்தம் பகுதியில் உள்ள C2 சுப்ரமண்யபுரம் காவல் நிலையம் 2001ம் ஆண்டு கட்டப்பட்டது. காவல் நிலையம் கட்டி 24 ஆண்டுகள் ஆன நிலையில் புரைமைக்க முடிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகம் மூலம் ௹40 லட்சம் மதிப்பீட்டில் நவீன கட்டமைப்பு, தொழில்நுட்ப வசதிகளுடன் புரைமைக்கப்பட்டது.

இதன் துவக்க விழாவில் மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திறந்து வைத்து குத்து விளக்கேற்றி பார்வையிட்டார். இந்நிகழ்வில் துணை ஆணையர்கள் இனிகோதிலீபன் வனிதா திடீர்நகர் உதவி ஆணையர் கணேசன் நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையர் பெத்துராஜ் சுப்பிரமணியபுரம் காவல் ஆய்வாளர்கள் சுரேஷ், வசந்தா தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழக செயற்பொறியாளர் ஜேம்ஸ்தாஸ் உதவி செயற்பொறியாளர் ஜெயசந்திரன் போக்குவரத்து ஆய்வாளர் பூர்ணகிருஷ்ணன் மற்றும் முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரர் முனைவர் ஆர்.ராமன் 74 வது மாமன்ற உறுப்பினர் எஸ்.வி.சுதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.