கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேட்டை சார்ந்தவர் ஷாஜஹான். இவருக்கு திருச்சி மாவட்டம் மணப்பாறையை சார்ந்த ஞானபிரகாசம் என்பவர் அறிமுமாகியுள்ளார்.

அவரிடம் தன்னிடம் விலை மதிக்க முடியாத இருடியம் இருப்பதாகவும், அதனை விற்றால் சுமார் 80 ஆயிரம் கோடி ரூபாய் விலை போகும் என்றும், அதனை விற்பனை செய்ய வரி உள்ளிட்ட செலவினங்களுக்கு பணம் தேவைப்படுவதாகவும், 1 லட்சம் கொடுத்தால் 1 கோடி தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
இதனை நம்பி ஷாஜஹான் 60 லட்ச ரூபாய் ஞானபிரகாசத்திடம் வழங்கியுள்ளார்.

கொடுத்த பணத்தையும் கொடுக்காமல் இருந்ததால் இது தொடர்பாக கரூர் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து திருச்சி மாவட்டம் மணப்பாறையை சார்ந்த ஞானபிரகாஷம் அவரது 2 மனைவிகளான அருள்செல்வி மற்றும் ஜான்சி ராணி ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.