குமரி மாவட்ட ஆட்சியர் விவசாய குறைதீர் கூட்டத்தை புறக்கணித்தது தொடர்பாக விவசாயிகள் பல்வேறு நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் உள்ள பொது பிரச்சனைகள் குறித்து மறு ஆய்வு கூட்டம் நடத்த கோரிக்கை விடுத்து இருந்தனர். அதற்கு முன் தயாரிப்பு கூட்டம் மாவட்ட அதிகாரிகள் தலைமையில் நடைபெற்றது. அதில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க தலைவர்கள் ஆகியோரிடம் இருந்து நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் உள்ள பொது பிரச்சனைகள் குறித்து மனு பெறப்பட்டது.

ஆனால் எந்த விவாதமும் நடத்தப்படவில்லை. மறு ஆய்வு கூட்டம் நடத்துவதற்காக ஏற்கனவே முன் தயாரிப்பு கூட்டத்தில் பெறப்பட்ட சுமார் 500க்கும் மேற்பட்ட தீர்க்கப்படாமல் நீண்டகால பொது பிரச்சனைகள் குறித்து மறு ஆய்வு கூட்டம் நடத்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோப்புகளும் தயார் செய்யப்பட்டது. ஆனால் இதுவரை மறு ஆய்வு கூட்டம் நடத்தாத நிலையில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்கள் மற்றும் விவசாய சங்க தலைவர்கள் ஆகியோர் குமரி மாவட்டம் வந்த சட்டப்பேரவை உறுதிமொழி குழுவை சந்தித்து மனு அளித்தனர்.

விவசாயிகள் தொடர்பான நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பொது பிரச்சனைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வைத்தோ அல்லது அலுவல் நாட்களில் மாலை 3 மணிக்கு பிறகு நேரடியாக சந்தித்து விவாதித்தோ தீர்வு காண விவசாயிகள் முயன்றும் மாவட்ட ஆட்சியர் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

அதனால் விவசாயிகள் விவசாயக் குறைதீர் கூட்டத்தில் கொடுக்கப்பட்ட மனுக்கள் தொடர்பாக இதுவரை தீர்வு காணப்படாமல் உள்ள நீண்டகால பொது பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்காத நிலையில், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து சட்டமன்ற பேரவை உறுதி குழு தலைவர் வேல்முருகன் தலைமையிலான குழுவினர்களை பாசன துறை சேர்மன் வழக்கறிஞர் வின்ஸ் ஆன்றோ தலைமையில் மாவட்ட குழு உறுப்பினர்கள் தாணு பிள்ளை , முருகேச பிள்ளை, அருள்,செண்பக சேகர பிள்ளை,விஜி, தேவதாஸ், இராதாகிருஷ்ணன், ரவீந்திரன், ஏசுதாஸ், மனோகரன், சுனில், தங்கப்பன் , தங்கபெருமாள் உட்பட விவசாய சங்கங்களின் தலைவர்கள் மற்றும் விவசாய பிரதிநிதிகள் விவசாயிகள் மற்றும் இவர்களுக்கு ஆதரவாக மீன்வளத்துறை குமரி மாவட்ட முன்னாள் சேர்மன் சகாயம் ஆகியோர் நேரில் சந்தித்து 11-09-2025 மதியம் மனு கொடுத்தனர் .

மனுவை பெற்றுக் கொண்ட சட்டமன்ற பேரவை உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் மற்றும் உறுப்பினர்கள் இந்த பிரச்சனையை தலைமைச் செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் கொண்டு சென்று விவாதித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதன் மூலம் குமரி மாவட்ட விவசாயிகள் மற்றும் ஆட்சியர் இடையேயான பிரச்சனை தமிழக அளவில் மேலும் பரபரப்பை உருவாக்கும் என்ற திசைக்கு திரும்பியுள்ளது..