இம்மானுவேல் சேகரனார் நினைவு தினம் வரும் செப்டம்பர் 11 ம் தேதி நாளை கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் வெம்பக்கோட்டை காவல் நிலையத்தில் நடைபெற்றது. இன்ஸ்பெக்டர் நம்பிராஜன் தலைமை வகித்தார், சப் இன்ஸ்பெக்டர்கள் முருகேஸ்வரன், குருநாதன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் இமானுவேல் சேகரனார் நினைவிடத்திற்கு செல்வதற்கு அறிவிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே செல்ல வேண்டும். அனுமதி பெறப்பட்ட வாகனங்களில் மட்டுமே செல்ல வேண்டும். வெம்பக்கோட்டை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்தவர்கள் மண்குண்டம்பட்டி முக்குரோடு வழியாக தாயில்பட்டி, படந்தால், சாத்தூர், வழியாக பரமக்குடி, செல்ல வேண்டும். ஏழாயிரம்பண்ணை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்தவர்கள் ஏழாயிரம்பண்ணை, ஒத்தையால், மேட்டுப்பட்டி, சாத்தூர், வழியாக பரமக்குடி செல்ல வேண்டும். மாறாக ஆலங்குளத்தில் இருந்து எதிர்கோட்டை, மண்குண்டாம்பட்டி வழியாகவும், மடத்துபட்டியில் இருந்து சிவகாசி செல்லும் பாதையும் தடை செய்யப்பட்ட பகுதியாகும் . ஆகையால் அதில் செல்ல முயற்சி செய்யக் கூடாது என போலீசார் தெரிவித்தனர்.