மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் வெள்ளாளர் உறவின்முறை சங்கம் சார்பாக சுதந்திர போராட்ட வீரர் வ உ சி பிறந்த நாளையொட்டி முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து அன்னாரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
இந்த முளைப்பாரி ஊர்வலம் வாடிப்பட்டி பழைய நீதிமன்றத்தில் இருந்து நாடார் மஹால் வரை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வ.உ. சிதம்பரனார் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. கௌரவத் தலைவர் பாபநாசம் தலைமை வகித்தார். தலைவர் தங்கராஜ் புதிய நீதி கட்சி தென்மண்டல தலைவர் வெங்கடாசலம் பிள்ளை, வெள்ளாளர் முன்னேற்ற கழகம் மாநில மகளிர் அணி தலைவி அன்னலட்சுமி சகிலா கணேசன் ஆகியோர் முன்னிலையில் வ உ சி யின் 154 வது பிறந்த நாளை முன்னிட்டு 154 முளைப்பாரியை பெண்கள் சுமந்து வந்தனர். மதுரை ஆர் எம் எஸ் பில்டர்ஸ் பொறியாளர் பொன். ரவிச்சந்திரன், தலைவர் ஏ ஆர் எம் ராமசாமி, சிவகாசி ராமர் ,ஒட்டன்சத்திரம் விக்னேஷ் ,திமுக மாநில பொறியாளர் அணி கலை கார்த்திகேயன், வ உ சி பேரவை மகளிர் அணி தலைவி கவிதா, துணைத்தலைவர் முருகவேல், செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் சந்தன பாண்டி ,மாரியப்பன், ராஜேந்திரன், எஸ் சோனை பாண்டி ,ஏ பி சோணைபாண்டி, ஆசைதம்பி, நாகமுத்துராஜா, த.மா.க வட்டாரத் தலைவர் சரவணன், முருகன் கொத்தனார், மட்டபாறை கண்ணன், மகளிர் குழு தலைவி சிலம்பரசி, தீபா, முத்துலட்சுமி ,மகளிர் குழு செயலாளர் முத்துலட்சுமி, காளீஸ்வரி, பொன்னுபாண்டி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். வாடிப்பட்டியில் வ உ சிதம்பரம் பிள்ளைக்கு வெண்கல சிலை அமைக்க வேண்டும் வ உ சி பிறந்த தினமான செப்டம்பர் 5 அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்டவைகள் குறித்து அரசுக்கு கோரிக்கை வைப்பது தொடர்பாக தீர்மானிக்கப்பட்டது. பொருளாளர் சந்தன பாண்டி நன்றி கூறினார்.


