கன்னியாகுமரி கடல் நடுவே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி கூண்டு பாலத்தின் கண்ணாடி கீறல் விழுந்ததை தொடர்ந்து என்.தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இதுகுறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளாததிற்கும், பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்க தவறியதற்கும் அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
