• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பிபின் ராவத் இறப்பு – பாகிஸ்தானிய ட்விட்டர் கணக்குகள் மீது வழக்குப்பதிவு

Byமதி

Dec 13, 2021

கடந்த 8ஆம் தேதி நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் சென்றபோது ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் நேற்று முன்தினம் உயிரிழந்தனர்.

இந்திய முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மரணம் குறித்து தவறான கருத்துக்களை பதியவிட்டதாக 2 பாகிஸ்தானிய ட்விட்டர் கணக்குகள் மீது பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சிபிசிஐடி சைபர் கிரைம் பிரிவினர் இந்த நடடிவக்கையை எடுத்துள்ளனர். ஏற்கெனவே இரு தினங்களுக்கு முன் பிபின் ராவது இறப்பு குறித்தும், ராணுவ ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாகவும் வதந்தி பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.