அதிமுகவில் கடந்த ஐந்தாம் தேதி ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும் அதிமுக அமைப்பு செயலாளருமான முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுகவில் பிரிந்து சென்றவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்தால்தான் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை தோற்கடித்து மாண்புமிகு அம்மாவின் ஆட்சியை தமிழகத்தில் மீண்டும் அமைக்க முடியும் அதற்கு அதிமுகவில் உள்ள அனைவரும் ஒன்று சேர வேண்டுமென பேட்டி அளித்திருந்தார்
அவரது இந்த கருத்திற்கு தமிழகம் முழுவதும் உள்ள அதிமுகவினர் பல்வேறு இடங்களில் அவரது கருத்தை ஆதரித்து சுவரொட்டிகள் ஒட்டி தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர் இந்த நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட செக்கானூரணி புளியங்குளம் நாகமலை புதுக்கோட்டை கின்னிமங்கலம் ஆகிய பகுதிகளில்

ஒன்று இணைவோம் வெற்றி பெறுவோம் அண்ணா திமுக கடைகோடி தொண்டர்களில் உள்ள குமுறல்களை வெளிப்படுத்திய கழகத்தின் உண்மை விசுவாசி செங்கோட்டையன் அவர்களின் கருத்தை வலுப்படுத்துவோம் பத்து நாள் கெடுவுக்குள் எடப்பாடி பழனிச்சாமி அவர்களே தானே முன்நின்று தலைவர்கள் உருவாக்கிய கட்சியையும் தொண்டர்களையும் காப்பாற்ற வேண்டும் இதுவே உங்களுக்கு கடைக்கோடி தொண்டர்களின் கடைசி அழைப்பு
என்ற வாசகம் அடங்கிய சுவரொட்டிகள் மற்றும் போஸ்டர்களை ஆங்காங்கே பல்வேறு இடங்களில் பொதுமக்கள் கூடும் இடங்களிலும் ஒட்டி உள்ளனர் அதிமுக தொண்டர்கள் மூலம் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் அதிமுகவின் உண்மை தொண்டர்கள் மத்தியிலும் நிர்வாகிகள் மத்தியிலும் ஒருவித புத்துணர்ச்சி ஏற்படுத்துவதாகவும் இதன் பிறகாவது பிரிந்து சென்றவர்கள் அதிமுகவை ஒன்று இணைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என அதிமுகவின் தொண்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர்