மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவாலவாயநல்லூர் கிராமத்தில் உள்ளது சப்பாணி மந்தை கருப்புசாமி கோவில். இந்த கோவிலில் இருந்து சுந்தர வள்ளி அம்மன் கோவிலுக்கு செல்ல கீழ் பகுதியில் பாதை கடந்த காலங்களில்பயன்படுத்தப்பட்டு .வந்தது.

2008ல் மதுரை மாவட்ட ஆட்சியர் அளித்த தவறான உத்தரவின் பேரில்கீழ் பகுதியில் சுவர் எழுப்பப்பட்டு பாதை மறைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அதனை எதிர்த்து கிராம பொதுமக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கின் அடிப்படையில் பாதை பொது பயன்பாட்டுக்கு கொண்டுவர மதுரை மாவட்ட ஆட்சியரால் ஆணை பிறப்பிக்கப்பட்டது. இந்த ஆணையை செயல்படுத்த வட்டாட்சியர், மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் இடம் கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர்.
அதன் அடிப்படையில் விரைந்து முடிவு எடுப்பதாக கூறினார். இருந்தும் பழைய மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் வட்டார வளர்ச்சி அலுவலர் மசூதிக்கு எதிரே குளியல் தொட்டியையும் அதற்கு மின் இனைப்பையும் பெற்று பேவர் பிளாக் ரோடு அமைத்தார் அதற்கும் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் மசூதிக்கு வடபுறமாக திடீரென கம்பி வேலி எழுப்பினர்.

அதனை கிராம மக்கள் வட்டாட்சியரிடம் முறையிட்டனர். வட்டாட்சியர் நேரில் வந்து விசாரித்து அரசு உத்தரவுபடி ஜேசிபி எந்திரம் மூலம் கம்பி வேலியினை காவல்துறை உதவியுடன் அகற்றினர். இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் விசாரணை செய்து சம்பந்தப்பட்ட இடம் பொதுப் பாதைக்கு பயன்படுத்தவும் அரசு நிலங்களை முறையாக கையகப்படுத்தவும் திருவாலவாய நல்லூர் கிராமத்தில் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படாத வகையிலும் மத நல்லிணக்கம் ஏற்படும் வகையிலும் அரசாணையை செயல்படுத்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டனர்