அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், கீழப்பழுவூரில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் தீ மிதி திருவிழா நேற்று சிறப்பாக நடைபெற்றது.

கடந்த 11 8 2025 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழா நிகழ்ச்சி கள்,ஊர் முக்கியஸ்தர்களின் மண்டகப்படிகள் நடத்தப்பட்டு, பின்பு நேற்று சக்தி அழைப்புடன் தொடங்கிய தீமிதி திருவிழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் பக்தி சிரத்தையுடன் விரதம் இருந்து, உடம்பில் அளகுகள் குத்தி, கையில் தீசட்டி ஏந்தி, அக்னி குண்டத்தில் இறங்கி, தீ மிதித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பல்லாயிர க்கணக்கான,பொதுமக்கள் பக்தர்கள் திரண்டு வந்து ஸ்வாமி தரிசனம் செய்தனர்.

இந்நிகழ்ச்சி க்கானகுடிநீர்,அன்னதானம்,இன்னிசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடு களையும் திருக்கோவில் நிர்வாகஸ்தர்கள், ஊர் நாட்டா மைகள் மற்றும் கிராம பொது மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.