மதுரை எலியார் பத்தி சுங்கச்சாவடியில் இன்று நள்ளிரவு ஒரு முறை முதல் கட்டண உயர்வு அமல் – 5 ரூபாய் முதல் 45 ரூபாய் வரை உயர்வு இருமுறை சென்று வர ரூபாய் 5 முதல் ரு45 வரை உயரத்தப்பட்டுள்ளது.

மதுரை – அடுப்புக்கோடை – தூத்துக்குடி உட்பட தமிழகம் முழுவதும் 32 க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமல்படுத்தப்படுகிறது .
குறைந்தபட்சமாக ஐந்து ரூபாய் முதல் 20 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள து.
இது குறித்து தென்னிந்திய நகர் பாதுகாப்பு கவுன்சில் சங்க பொது செயலாளர் வக்கீல் சிங்கராஜ் குருவையில் ஆண்டுக்கு ஒரு முறை கட்டணத்தை சுங்கச்சாவடியில் உயர்த்துகின்றனர் இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைகின்றனர் மதுரை பெரியார் பட்டியலில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாரப்பத்தி செல்வதற்கு 90 ரூபாய் கட்டணம் வசூலிக்கிறார்கள் இதனால் இங்கிருந்து செல்லப்படும் கரைக வாகனங்களுக்குகூடுதல் கட்டணம் வசூலிப்பதால் கட்டண சுமை ஏற்பட்டு அத்தியாவசிய பொருளான அரிசி காய்கறி போன்ற பொருள்கள் விலை உயர்வு ஏற்படும் ஆகையால் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு சுங்க கட்டண உயர்வை குறைக்க மறு பரிசீலனை செய்ய வேண்டும் என தென்னிந்திய அனுபவம் சார்பாக கோரிக்கை விடப்பட்டுள்ளது

இதேபோல் வலையங்குளம் பகுதியை சேர்ந்த அழகுராஜா என்று அவர் கூறுகையில் இங்கிருந்து ஒரு கிலோமீட்டர் சென்றாலும் குறைந்த பட்சம் 90 ரூபாய் கட்டணம் வசூல் செய்கின்றனர் இதனால் இப்பகுதியில் தொழில் கூடங்கள் அமைக்க பராமரித்து 20 கிலோமீட்டர் தள்ளி தொழில் கொடுங்கள் அமைகின்றனர் இதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது கட்டணச் சுமையால் அத்தியாவசிய பொருட்களின் விலை கூடுகிறது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக முழுவதும் மொத்தமுள்ள 80க்கும் மே ற்பட்ட சுங்கத் சாவடிகளில் ஆண்டுதோறும் கட்டண உயர்வு இரண்டு பிரிவாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.
முதல் பிரிவாக ஏப்ரல் மாதம் 48 சுங்கச்சாவடிகளுக்கும்.
இரண்டாவதாக செப்டம்பர் மாதம் மீதமுள்ள 12 சுங்கச்சாவடிகளுக்கும் ஆண்டுதோறும் கட்டணம் உயர்த்திக்கொள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதித்துள்ளது.
அதன் அடிப்படையில் 2025ம் ஆண்டுக்கான கட்டண உயர்வு தமிழக முழுவதும் உள்ள 20க்கும் மேற்பட்ட சுங்கசாவடிகளில் செப்டம்பர் 1ம் தேதி நள்ளிரவு முதல் அமல்படுத்தப்படுகிறது.திருச்சி,சேலம் ,மேட்டுப்பட்டி, விழுப்புரம் உளுந்தூர்பேட்டை, மதுரை, தூத்துக்குடி உட்பட 20க்கும் மேற்பட்ட இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது –
இதன் ஒரு பகுதியாக மதுரை – அருப்புக்கோட்டை சாலையில் உள்ள எலியார்பத்தி சுங்கச்சாவடியில் சுங்க கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக சுங்கச்சாவடி நிர்வாகம் தெரிவித்துள்ளது .அதனடிப்படையில் கார்,வேன்,ஜீப் உள்ளிட்ட வாகனங்கள் ஒருமுறை சென்று வர பழைய கட்டணம் 90 ரூபாயிலிருந்து 95 ரூபாயாகவும் இரு முறை சென்று வர 135 ரூபாயிலிருந்து140 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
மாதாந்திர கட்டணம் ரூபாய் 2720 இல் இருந்து 2785 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இலகு ரக வாகனங்கள் ஒரு முறை சென்று வர 160 ரூபாயாகவும் இரு முறை சென்று வர 240 ரூபாயிலிருந்து 245 ஆகவும் மாதாந்திர கட்டணம் 4765 ரூபாயிலிருந்து 4,870 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதேபோல் லாரி, பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்கள் ஒருமுறை சென்று வர கட்டணம் ரூபாய் 320லிருந்து 325 ரூபாயாகவும் இரு முறை சென்று வர 475 லிருந்து 485 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர கட்டணமாக ரூபாய் 9525 லிருந்து 9740 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதேபோல் இரண்டு அச்சு மிக கனரக வாகனங்கள் ஒரு முறை சென்று வர ரூபாய் 510 லிருந்து 520 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.இருமுறை சென்று வர கட்டணம் 765 ரூபாயிலிருந்து 785 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
மாதாந்திர கட்டணமாக 15310 ரூபாயிலிருந்து 15655ரூபாயாக உயர்த்த ப்பட்டுள்ளது.
மொத்தத்தில் ஒருமுறை சென்று வர கட்டணம் ஐந்து ரூபாயில் இருந்து 45 ரூபாய் வரையும் இருமுறை பயண கட்டணம் 5 ரூபாயிலிருந்து 20 ரூபாய் வரையும் மாதாந்திர கட்டணம் 65ரூபாயிலிருந்து 350 ரூபாய் வரையும் உயர்த்தப்பட்டுள்ளது இந்தக் கட்டண நிர்ணயம் அனைத்தும் பாஸ் டேக் வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும் பாஸ் டேக் இல்லாத வாகனங்கள் இருமடங்கு கட்டணம் செலுத்த வேண்டும் என டோல்கேட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சொந்த உபயோகத்திற்கு வாகனம் வைத்திருப்பவர்களுக்கு வருடாந்திர பாஸ் எடுப்பதன் மூலம் உங்க கட்டணம் செலவு குறைய வாய்ப்புள்ளதாகவும் சுங்க சாவடி நிர்வாகம் தெரிவித்துள்ளது.





