• Sun. Sep 21st, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

சடலத்துடன் உறவினர்கள் சாலை மறியல்..,

BySubeshchandrabose

Sep 1, 2025

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஒன்றியத்திற்கு குட்பட்டது நாகலாபுரம் கிராமம் போடிநாயக்கனூரில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த கிராமத்தில் கெஞ்சம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் வனராஜ் ( சுமார்57).

விவசாயக் கூலியாக வேலை பார்த்து வரும் இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி உள்ள நிலையில் இவரது மகன் முத்து செல்வம் கொத்தனார் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது.

இவரது மனைவி இவருடன் தகராறு செய்து தனது சொந்த ஊரான போடிநாயக்கனூரில் வசித்து வருவதாகவும் போராட்டக் காலமாக பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது இவருக்கு இரண்டு ஆண் மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் கொத்தனார் வேலை பார்த்து வரும் முத்துச்செல்வம் என்ற கார்த்திக் நாகலாபுரம் அருகில் உள்ள தெற்குப்பட்டி காளியம்மன் கோவில் அருகில் வசித்து வரும் கவிதா என்ற பெண்ணிடம் பண வரவு செலவு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மாலை சுமார் 6 மணியளவில் முத்து செல்வம் என்ற கார்த்திக் பணம் கேட்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

கவிதா பணம் பார்த்துதர மறுத்ததாகவும் இருவருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

செல்வம் அப்பகுதியில் தகராறு செய்வதாக விவரமறிந்த வனராஜ் அங்கு சென்று தடுக்க முயற்சித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கவிதா மற்றும் முத்து செல்வத்திற்கு இடையே கைகலப்பு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் முத்து செல்வத்தை தாக்கிய பொழுது முத்து செல்வத்துடைய தந்தை வனராஜ் தாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து கவிதா முத்துச்செல்வம் மீது சாதிய வன்கொடுமை சட்டத்தின் கீழ் போடிநாயக்கனூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

தகராறில் தாக்கப்பட்டதால் அவமானம் அடைந்த வனராஜ் விவசாயத்திற்கு பூச்சிக்கொல்லியாக பயன்படுத்தப்படும் திம்மேட் என்ற மருந்தை உண்டு தற்கொலைக்கு முயற்சித்து உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அவர் விஷ மருந்து அருந்தி உயிரிழந்த நிலையில் வனராஜ் உடைய சடலத்தை வைத்துக்கொண்டு போடிநாயக்கனூரில் இருந்து தேவாரம் செல்லும் நெடுஞ்சாலையில் நள்ளிரவு 11 மணியளவில் சாலை மறியலில் அமர்ந்தனர்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சாலை மறியலை கைவிடக்கோரி கூறிய நிலையில் வனராஜ் உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் காவல்துறையினரிடம் வழக்கில் தொடர்புடைய நபரை கைது செய்ய வேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மறியல் போராட்டம் நீண்ட நிலையில் போடிநாயக்கனூர் சரக துணை கண்காணிப்பாளர் சுனில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களிடம் நடைபெற்ற சம்பவம் குறித்து உரிய என்று மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து போராட்டத்தை கைவிடக் கூறி வனராஜ் உடைய சடலத்தை பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்ட நிலையில் காவல்துறையினர் சம்பவம் குறித்து இரு தரப்பில் இடையே உண்மை நிலவரம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.