• Tue. Dec 30th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

முதல் மாவட்ட கோரிக்கை மாநாடு..,

ByT. Balasubramaniyam

Aug 30, 2025

அரியலூர் பிஎன்எம் திருமண மஹாலில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு (FERA), அரியலூர் மாவட்ட மையத்தின் சார்பில் முதல் மாவட்ட கோரிக்கை மாநாடு நடைபெற்றது.தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநில பொருளாளர் சோமசுந்தரம் சிறப்பு அழைப்பாளராக கோரிக்கை மாநாட்டில் கலந்து கொண்டு, சங்க கொடியினை ஏற்றி மாநாட்டினை துவக்கி வைத்து, சிறப்புரையாற்றினார்.

முன்னதாக ,தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் அரியலூர் மாவட்ட இணை செயலாளர் பா.சரவணன் மாநாட்டுக்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றார்.தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கா ஆனந்த வேல்,தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கத்தின் அரியலூர் மாவட்ட செயலாளர் ஜி.பாக்யராஜ்,தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்சங்கத்தின் மாவட்ட செயலாளர்வி பழனிவேல்,தமிழ்நாடு நில அளவையர்கள் ன்றிப்பு அரியலூர் மாவட்ட செயலாளர் ஏ.அடைக்கலம் பிரவீன், தமிழ்நாடு துறை கிராம உதவியாளர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் அறிவானந்தம், உள்ளிட்டோர் தலைமை வகித்தனர்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் அரியலூர் மாவட்ட தலைவர் என். வேல்முருகன், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தின் அரியலூர் மாவட்ட துணை தலைவர் ந சம்பத், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் ஆர் பைரவன், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் அரியலூர் மாவட்டசெயலாளர் காந்தி,எம் ஆர் பி செவிலியர் சங்கத்தின் அரியலூர் மாவட்ட தலைவர் ராகவன், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட இணைச் செயலாளர் வீ செந்தில் குமார்,மத்திய செயற்குழு உறுப்பினர் இரா.சந்திரசேகர்,
கோரிக்கை விளக்க உரையாற்றினர்.

மாநாட்டில்,வருவாய் மற்றும் பேரிடர்மேலாண்மைத்துறை, நில அளவைத் துறை உள்ளிட்ட அனைத்து நிலையி லான அலுவலர்களின் உயிர் மற்றும் உடமை களைக் காக்கும் வகையில் “சிறப்பு பணிப் பாதுகாப்பு சட்டத்தை ” தமிழக அரசு உடன் நிறை வேற்ற வேண்டும், பொதுமக்களுக்கான பணியை மேலும் சிறப்பாக செய்திட வருவாய் மற்றும் பேரிடர்மேலாண்மைத் துறையில் உள்ள அனைத்து நிலையி லான காலிப் பணி யிடங்களையும் விரைந்து நிரப்பிட வேண்டும்,வருவாய்த்துறையில்பணிபுரியும் அலுவலர்களுக்கு அதீதமான பணி நெருக்கம் ஏற்படுத்துவது தொடர்பாகவும், குறிப்பாக களப்பணியாளர்களுக்கு போதிய கால அவகாசம் வழங்காமல் இலக்குகள் நிர்னயிக்கப்பட்டு மன அழுத்தத்துடன் பணிபுரிய நிர்பந்தம் செய்வதை தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் முற்றாககைவிடவேண்டும்,வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் நில அளவைத் துறையில்பணிபுரிந்து வரும் அனைத்து நிலையிலான அலுவலர்களின் பணித்தன்மை மற்றும் பணிப்பளுவை கருத்தில் கொண்டு அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம்உடன்வழங்கிட வேண்டும்.

அரசுப் பணியின் போது உயிரிழக்கும் அரசு ஊழியர்களின் வறிய கூழல் மற்றும் வாழ் வாதரத்தை கருத்தில் கொண்டு, கருணை அப்ப பணி நியமனத் திற்கு உச்சவரம்பு 5% என குறைத்து நிர்ணயம்செய்யப்பட்டுள்ளதை இரத்து செய்து மீண்டும் 25% ஆ உயர்த்தி வழங்கிட வேண்டும். கிராம உதவியாளர்களுக்கு கருணைஅடிப்படையிலான பணி நியமனம் இரத்துசெய்யப்பட்டுள்ளதை .மீண்டும்வழங்கிடவேண்டும்,வருவாய் மற்றும்பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் நில அளவைத் துறையின் பணித்
தன்மையை கருத்தில் கொண்டு அனைத்து நிலைகளி லும், வெளி முகமை, தற்காலிக மற்றும் தொகுப்பூதிய பணி நியமனங்களை முழுமையாக கைவிட வேண்டும்.

அனைத்து பணியிடங்களையும் நிரந்தரஅடிப்படையில் நிரப்பிட வேண்டும்,
ஒவ்வொரு வருடமும் ஜுலை 1ம் நாளை ( ஆண்டின்தொடக்கம்)வருவாய்த்துறை தினமாக அனுசரித்து அரசாணை வெளியிட வேண்டும். மேலும், பொதுமக்களுக்கு அனைத்து நிலை வருவாய்த்துறை அலுவலர்களின் தன்னலம் கருதா பணியை அங்கீகாரம் செய்யும் வகையில் மாநில அளவில் அரசு நிகழ்ச்சிகள் நடத்தப்படவேண்டும்,

வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பின் நியாயமான கோரிக்கைகளை பேச்சுவார்த்தை அடிப்படையில் நிறைவேற்றிட தமிழக முதலமைச்சர் உத்தரவிட வேண்டும். முடிவில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் அரியலூர் மாவட்ட பொருளாளர் நம் திரு ரமேஷ்அனைவருக்கும் நன்றி கூறினார்.