அரியலூர் மான் போர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில்,பள்ளியின் 32 வது ஆண்டு விளையாட்டு விழா நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன.

இந்நிகழ்ச்சியனை பள்ளியின் முதல்வர் Rev . Bro.அந்தோணிசாமி தலைமையேற்று துவங்கி வைத்தார்.தொடர்ந்து பள்ளி மாணவ மாணவியர்களின் பல்வேறு விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், நடைபெற்றன.நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அரியலூர் மாவட்டகல்வி அலுவலர் எஸ் சித்ராதேவி (தனியார் பள்ளிகள்),மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன்அலுவலர் என் லெனின்,மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பி தே கலிசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு,விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி சிறப்புரையாற்றினர்.

இவ்விழாவில்,ஆசிரியை, ஆசிரியர்கள்,உடற்கல்வி ஆசிரியர்கள், பயிற்றுநர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.