புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் காரைக்கால் மற்றும் திருநள்ளாறு பகுதியில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கியில் என்.ஆர்.ஐ வங்கி கணக்கு வைத்துள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் தனியார் நட்சத்திர விடுதி அரங்கில் நடைபெற்றது.

இதில் பேங்க் ஆப் இந்தியா சென்னை மண்டல மேலாளர் மோகன் மாரேத்தி, கோட்ட பொது மேலாளர் ராமதாஸ் மற்றும் காரைக்கால், திருநள்ளாறு கிளை மேலாளர்கள் பங்கேற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட என்.ஆர்.ஐ கணக்கு வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் என்.ஆர்.ஐ கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கான சிறப்பு திட்டங்கள் மற்றும் வங்கி சார்பில் டெப்பாசிட்டிகளுக்கு வழங்கப்படும் கூடுதல் வட்டி விகிதங்கள் குறித்தும் எடுத்துக் கூறப்பட்டது.
மேலும் வங்கியின் பெயரில் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் ஓ.டி.பி எண்களை கேட்டால் யாரிடமும் அளிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது.