• Fri. Jan 23rd, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

தேசிய விளையாட்டு நாள் விழா அமைச்சர் பங்கேற்பு.,

Byரீகன்

Aug 29, 2025

29.8.2025 அன்று இந்திய ஹாக்கியின் ஜாம்பவான் என்று போற்றப்பட்ட மேஜர் தயான் சந்த் அவர்களின் பிறந்தநாளையொட்டி தேசிய விளையாட்டு நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரி, இந்திய தேசிய விளையாட்டுக் கூட்டமைப்பு (PEFI), ரோட்டரி அமைப்புகளான திருச்சி பட்டர்பிளை, திருச்சி டிசி பிரைடு ஆகியவை இணைந்து மாபெரும் மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்வினை திருச்சிராப்பள்ளி காவிரி மேம்பாலத்தில் அரங்கேற்றினர்கள்.

தேசியக் கல்லூரியைச் சார்ந்த ஆயிரம் மாணவ மாணவிகள் பங்கேற்ற மாபெரும் மனித சங்கிலியை தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார் இந்த மனித சங்கிலியில் பதாகைகளை ஏந்தி தேசியக் கல்லூரி மாணவர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். சிறந்த பதாகைகளுக்கு அமைச்சர் முன்னிலையில் சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டன.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தேசியக் கல்லூரியின் பொறுப்பு முதல்வர் முனைவர் முத்துராமகிருஷ்ணன், ரோட்டரி சங்க உறுப்பினர்கள், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர். ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பங்கேற்ற இம்மாபெரும் விளையாட்டு நாள் விழா விழிப்புணர்வு மனிதச் சங்கிலி நிகழ்வினை தேசியக் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் பிரசன்ன பாலாஜி சிறப்பாக ஒருங்கிணைத்தார்.