சென்னை அடுத்த குரோம்பேட்டை ராதா நகர் பகுதியில் விநாயகர் பக்தர் சீனிவாசன் 19வது ஆண்டாக 22,000 விநாயகர் சிலைகளுடன் கண்காட்சி நடத்தி வருகிறார்.
இன்று முதல் செப்டம்பர் 7ஆம் தேதி வரை நடைபெறுகின்ற கண்காட்சி விதவிதமான பிள்ளையார் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது.

பொது மக்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படுகிறது. கண்காட்சியை தமிழக சிறு குரு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ .அன்பரசன் திறந்து வைத்து பார்வையிட்டார். பல்லாவரம் எம்எல்ஏ இ. கருணாநிதி தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி உட்பட ஏராளமானவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்த கண்காட்சியில் சிப்பிக்குள் முத்து போல பிள்ளையார் முத்துலிருந்து பிறந்து வருவது போல தத்ரூபமாக இந்த ஆண்டு விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது.
இருளிலும் மின்னும் ரேடியம் பிள்ளையார் திண்ணையில் படுத்து ஓய்வெடுக்கும் பிள்ளையார், சங்கு பிள்ளையார் என பல்வேறு பிள்ளையார்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக ராணுவத்தில் சண்டை போடும் பிள்ளையார் இடம் பெற்றுள்ளது.

இதில் தங்கம், வெள்ளி, செம்பு, பித்தளை, ஐம்பொன், இரும்பு, கண்ணாடி உள்ளிட்டவற்றால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் இடம் பெற்றுள்ளன.
விநாயகர் கண்காட்சியை ஏற்பாடு செய்த சீனிவாசன் ஒவ்வொரு விநாயகரின் சிறப்பம்சங்கள் குறித்து அமைச்சருக்கு எடுத்துரைத்தார்.