தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தின் விரிவாக்க நிகழ்வினை இன்று தமிழக முதலமைச்சர் மாண்புமிகு..மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.

குமரி மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் இத்திட்டம் துவங்கப்பட்டது.
அம்மாண்டிவிளை அருகே திருநயினார் குறிச்சி சரோஜினி நினைவு தொடக்கப் பள்ளியில் குமரி மாவட்ட முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் தலைமையேற்று துவக்கி வைத்தார்.

தாளாளர் நாராயணன் தம்பி, தலைமை ஆசிரியர் உஷா, ஆசிரியர்கள் இசபெல்லா ராணி, மல்லிகா, திமுக பேரூர் செயலாளர் ரங்கராஜா உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.
