• Thu. Jan 15th, 2026
[smartslider3 slider="9"] Read Now

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சேரப்பா!

Byமதி

Dec 12, 2021

அம்மா பாசத்தை மட்டுமே பார்த்து ரசித்த தமிழ் சினிமாவில், தந்தையின் பாசத்தை அணித்தரமாக எடுத்துரைத்த இயக்குநர் நடிகர் சேரன் அவர்களின் 49வது பிறந்தநாள் இன்று.

1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படம் மூலம் இயக்குநரான சேரனின் திரைப்படங்களைப் பார்க்கும்போது ஏற்படும் உணர்வே தனி தான். நம்மையும் அறியாமல் கண்களில் கண்ணீர் எட்டிப்பார்க்கும். பொற்காலம், தேசிய கீதம், வெற்றிக்கொடி கட்டு, பாண்டவர் பூமி, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து, பொக்கிஷம் போன்ற யதார்த்தமான உயிரோட்டமிக்க திரைப்படங்களை இயக்கி தமிழர்களின் மனங்களில் என்றென்றும் மறக்க முடியாத இடத்தைப் பெற்றுவிட்டவர்.

இவர் இயக்கி நடித்த ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து படங்களுக்கு தேசிய விருது, மாநில அரசு விருது மற்றும் பல விருதுகளை வழங்கி இவரது படைப்பாற்றலை கௌரவித்து.

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு ரசிகர்கள் அவரை அனைவரும் அன்புடன் சேரப்பா என்று அழைக்கிறார்கள். சேரப்பாவுக்கு பலரும் சமூக வலைதளங்களில் பிறந்தநாள் வாழ்த்து வருகின்றனர்.