அரியலூரில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில்,மாவட்ட வருவாய் அலுவலர் க.ரா . மல்லிகாவை நேரில் சந்தித்து , தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர்.

அம்மனுவில் அரியலூர் ஒன்றியம், பெரியநாகலூர் பெரிய ஏரியினை பல ஆண்டுகளாக தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்து, ஏரியினை நிரவி அதில் தைல மரம், மூங்கில் உள்ளிட்ட மரங்களை பயிரிட்டு ஏரி தன்னுடைய நிலம் எனக் கூறி வருகிறார்.அதனை மீட்டு தரக்கோரி மாவட்ட நிர்வாகத்திடம் ஏற்கனவே நான்கு முறை மனு அளித்துள்ளோம், எனவே உடனடியாக பெரிய நாகலூர் பெரியேரி ஆக்கிரமிப்பினை மாவட்ட நிர்வாகம் அகற்றிட நடவடிக்கை வேண்டும்,

மக்காசோளம் பயிரிடும் விவசாயிகளுக்கு, அரசு மானிய விலையில், மக்காசோள விதைகள் வழங்கிட வேண்டும், செந்துறை உள்ளிட்ட மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் முந்திரி பயிரிடப்படும் நிலங்களுக்கு வரப்புகள் அமைத்து தர வேண்டும் என தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் புரவலர் பூ. விஸ்வநாதன் அம்மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிகழ்வின் போது, சங்கத்த்தின்மாநில செயற்குழு உறுப்பினர் பரமசிவம், மாவட்டதலைவர் சின்னப்பன், ச
ஒன்றிய தலைவர் அறிவழகன், நிர்வாகிகள் சிவலிங்கம் பாலசுப்ரமணியன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர் .