தமிழகத்தில் பல்வேறு உணவு செயலிகள் உள்ள நிலையில் கரூர் மாவட்ட ஹோட்டல் உரிமையாளர் சங்கம் சார்பில் ZAAROZ சென்ற உணவு டெலிவரி செயலியை அதன் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டது.

இதில், 150-க்கும் மேற்பட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் இணைந்துள்ளதாகவும் இதன் மூலம் கரூர் நகரில் 15 கிலோமீட்டர் சுற்றவுக்கு அளவுக்கு உணவு பொருட்கள் ஹோட்டல் விலைக்கே டெலிவரி செய்யப்படும் எனவும், இந்த டெலிவரிக்காக 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

முதல் கட்டமாக உணவுப்பொருட்கள் கட்டணமில்லாமல் டெலிவரி செய்யப்படட உள்ளதாகவும் விரைவில் மளிகை பொருட்கள், காய்கறி உள்ளிட்டவைகளும் இந்த செயலி மூலம் வீட்டுக்கு டெலிவரி செய்யப்படும் என கரூர் மாவட்ட ஹோட்டல் உரிமையாளர் சங்க தலைவர் கருப்பையா தெரிவித்தார்.