அரியலூர் மாவட்டம் முழுவதும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி உத்தரவின் படி காவல்துறையினர் கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் விற்பனை நடைபெறுகிறதா என்று அவ்வப்போது தீடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி , ஆண்டிமடம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ரமேஷ் தலைமையிலான காவல்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டபோது வரதராஜன் பேட்டையைச் சேர்ந்த அருளப்பன் (வயது 64) த/பெ சவரிமுத்து என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், புகையிலை மற்றும் குட்கா பொருட்களை தனது கடையில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்துள்ளார்.
இதனை அடுத்து அருளப்பன்-ஐ காவல்துறையினர் கைது செய்து அவரிடம் இருந்து 1.ஹான்ஸ் – 480 கிராமம் 2. பான் மசாலா – 1.05 கிகி 3. புகையிலை பொருட்கள் – 126 கிராம் முதலிய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
