அரியலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில், அரியலூரில் உள்ள அரசு பல்துறை வளாகத்தில் செயல்படும் முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் இலவச சட்ட உதவி மையம் திறப்பு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ,மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதியுமாகிய மலர்வாலண்டினா தலைமை வகித்து ,சட்ட உதவி மையத்தை துவக்கி வைத்து பேசுகையில், தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு முன்னாள் படை வீரர்களுக்காக வீர் பரிவார் சகாயத யோஜனா 2025 என்ற திட்டத்தை நாடு முழுவதும் அறிமுகப் படித்தியிருக்கிறது. இங்கு திறக்கப்பட்டுள்ள இச்சட்ட உதவி மையம் புதன் கிழமை தோறும் செயல்படும் என்பதையும் இதனை முன்னாள் படை வீரர்கள் பயன்படுத்தி தங்களின் சட்டம் சார்ந்த மற்றும் சட்டம் சாராத பிரச்சனைகளுக்கு இலவச சட்ட உதவியை பெறலாம் என்பதையும், மேலும் அனைத்து விதமான சட்ட ஆலோசனைகளையும் பெறலாம் என்பதையும், மேலும் 24 மணி நேரமும் சட்ட உதவி பெற இலவச (Tollfree)15100 என்பதையும் அறிவுறுத்தினார்.

விழாவில் அரியலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் இராதாகிருஷ்ணன், உதவி இயக்குனர் கலையரசி, வழக்கறிஞர் திலகவதி, அலுவலக ஊழியர்கள், சட்ட தன்னார்வலர்கள், முன்னாள் படை வீரர்கள் மற்றும் சட்டப்பணிகள் குழு ஊழியர்கள் பலர் பங்கேற்றனர்.