தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாரபத்தி கிராமத்தில் 500 ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பில் நடத்த திட்டமிடப்பட்டு வரும் 21 ஆம் தேதி மாநாடு நடைபெற உள்ளது.

இதற்காக மதுரை மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்களை வரவேற்கும் விதமாக தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் பல்வேறு விதமான பேனர்கள் மற்றும் போஸ்டர்கள் அடித்து ஒட்டப்பட்டு வருகிறது.
இதனடையில் மதுரையில் தவெக 2 வது மாநில மாநாடு நடைபெறும் கிராமமான பாரபத்தியில் அங்குள்ள அஜித் விஜய் ரசிகர்கள் அஜித்தின் வெற்றி படங்களின் புகைப்படங்களான அட்டகாசம், பில்லா, அமர்க்களம், ஆரம்பம், தீனா உள்ளிட்ட அஜித்தின் புகைப்படங்களுக்கு நடுவே விஜயின் புகைப்படத்தை வைத்து பேனர் அடிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாநாடு “READYA MAAMEY”என்ற வசனமும் எதிர்கால தமிழ்நாடு என்ற வசனத்துடன் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. அனைத்து மக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அஜித் ரசிகர்கள் விஜய் மாநாட்டிற்கு அடித்த பேனர்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.