புதிய விரிவான மினி பேருந்து சேவையை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். புதிய திட்டத்தின் கீழ், மினி பேருந்துகள் அதிகபட்சமாக 25 கி.மீ. தூரம் வரை இயக்க அனுமதிக்கப்படும் என்று அதிகாரப் பூர்வ வெளியீடு தெரிவித்து உள்ளது.
சேவை இல்லாத பகுதிகளுக்கு சேவை செய்யும் வகையில் இந்தத் திட்டம் தற்போது மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. மேலும், மினி பேருந்துகள் பேருந்து நிலையங்களில் இருந்து தங்கள் பயணத்தைத் தொடங்க, நிறுத்த அனுமதிக்கப்பட்டன.

இந்நிலையில் கோவை, காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில் இருந்து மருதமலை வரை ஸ்ரீராம் என்ற மினி பேருந்து மற்றும் கலைமகள் என்ற தனியார் பேருந்து இயக்கப்படுகிறது. அதில் ஸ்ரீராம் என்ற மினி பேருந்து நடத்துனராக சூர்யா இருந்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை கலைமகள் என்ற தனியார் நகரப் பேருந்து காந்திபுரம் பேருந்து நிலையத்தில் மாலை 6.15 மணியில் இருந்து 6.25 மணி வரை அதிக நேரம் நிறுத்தி பயணிகளை ஏற்றுக் கொண்டு இருந்த இதனை இனி பேருந்து நடத்துனர் சூர்யா கேள்வி எழுப்பி உள்ளார்.
அப்பொழுது இரண்டு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் 46 என்ற எண் கொண்ட கலைமகள் என்ற தனியார் பேருந்து ஓட்டுநர் அதிவேகமாக பின்னோக்கி பேருந்து இயக்கி வேகமாக வந்து ஸ்ரீராம் மினி பேருந்து மீது மோதியது.
இது குறித்து ஸ்ரீராம் மினி பேருந்து நடத்துனர் சூர்யா காந்திபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.
அதில் 46 என்ற எண் கொண்ட கலைமகள் பேருந்து உரிமையாளர், நடத்தினர் மற்றும் ஓட்டுநர் சேர்ந்து மினி பேருந்து நடத்துனர் சூர்யாவை மூவரும் சேர்ந்து தாக்கி காயப்படுத்தி, பேருந்தை இடித்து தள்ளி கொலை செய்ய முயற்சித்ததாகவும், மேலும் தகாத வார்த்தைகளால் திட்டி ஜாதி பெயரை சொல்லி தாக்கியதாகவும் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்காணிப்பு கேமரா காட்சிகளைக் கொண்டு புகார் அளித்தார்.

மினி பேருந்து மீது தனியார் நகரப் பேருந்து மோதும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் சி.சி.டி.வி காட்சிகள் தற்பொழுது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது போன்ற பேருந்தை இயக்கி மோதி விபத்தை ஏற்படுத்தும் ஓட்டுனர்களால், பொதுமக்களின் பயணம், பயமாக மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பயணிகளின் பயணம் பயமற்று , பயன் உள்ளதாக அமையும் என்பதை அனைவரின் கோரிக்கையாக உள்ளது.