திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பேருந்து நிலையத்தில் மாலை நேரத்தில் பள்ளி மாணவர்கள் பேருந்துக்காக காத்திருந்தபோது, மர்ம நபர் ஒருவர் அரிவாளுடன் சுற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த திகிலூட்டும் நிகழ்வு வீடியோவாக பதிவாகி, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மாணவர்கள் பயத்தில் உறைந்த நிலையில், அந்த நபர் அருவாளை சுற்றி மிரட்டியதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து நத்தம் காவல்துறை விசாரணையை தொடங்கியுள்ளது. பொது இடங்களில் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பிய இந்த சம்பவம், பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளியை கண்டறிய காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.