விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் போட்டோ வீடியோ கலைஞர்கள் நல சங்கம் சார்பில் 186 வது உலக புகைப்பட தின விழாவை முன்னிட்டு இராஜபாளையம்
பி எஸ் சி ஆர் அரசு மருத்துவமனையில் மரக்கன்றுகளை நட்டு அங்கு உள்ள நோயாளிகளுக்கு பழங்கள் பிஸ்கட்கள் வழங்கினர்.

நிகழ்ச்சியில் இராஜபாளையம் அரசு மருத்துவமனை மருத்துவ அதிகாரி Dr.உமா ஜெயபாஸ்கர். மருத்துவர் சுரேஷ்குமார். செவிலியர் கண்காணிப்பாளர் சரஸ்வதி. விருதுநகர் மாவட்ட புகைப்பட கலைஞர்கள் நல சங்க மாவட்ட தலைவர் மோகன்ராம் ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டினர் நிகழ்ச்சி ஏற்பாடு இராஜபாளையம் போட்டோ வீடியோ கலைஞர் நல சங்க தலைவர் ராமகிருஷ்ணன் செயலாளர் ராதாகிருஷ்ணன் பொருளாளர் ராமசுப்பிரமணியம் செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் கிளை கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டு மரக்கன்று நட்டு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு பழங்கள் மற்றும் பிஸ்கட் வழங்கினர்.

எண்ணங்களை வண்ணமாக்கி அழகிய நினைவுகளாக கல்வெட்டுக்கள் போல் என்றும் நிலைத்திருக்கும் வகையில் புகைப்பட தொழிலில் ஈடுபடக்கூடிய புகைப்பட கலைஞர்களை வாழ்த்துவதாகவும், இதுபோன்று பல சேவைகளை அரசு மருத்துவமனைக்கு செய்ய வேண்டும் எனவும் மருத்துவ அதிகாரி உமா ஜெயபாஸ்கர் தெரிவித்து புகைப்பட தொழிலாளர்களுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.