விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் சார்பில் 38வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்ற தலைவர் ராமராஜ் ஏற்பாட்டில் மும்பையில் இருந்து வரவழைக்கப்பட்ட சிற்பக் கலைஞர்களைக் கொண்டு லட்சக்கணக்கான பொருட்கள் செலவில் விநாயகர் சிலைகள் மிகச் சிறப்பாக செய்யும் பணி நடைபெற்று .

வித்தியாசமான வடிவமைப்பில் அருள் பொருள் அருளும் கணபதி. மங்கல கணபதி. மற்றும் விஜய கணபதி . ஆனந்த சயன கணபதி. ஆனந்த கணபதி என பல்வேறு வடிவத்தில் விநாயகர் சிலைகள் அமைக்கும் பணி நடைபெற்று இந்த பணிகள் நிறைவுற்று தருமபுரம் தெருவில் பிரதிஷ்டை செய்ய அலங்கரிக்கப்பட்ட ஐந்து டிராக்டர் மூலம் எடுத்து வரப்பட்டன.

இதைத் தொடர்ந்து தினந்தோறும் பல்வேறு பூஜைகள்,கலை நிகழ்ச்சிகள் .இலவச திருமணம் பக்தர்களுக்குஅன்னதானம் நடைபெறும். அதைத் தொடர்ந்து விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும்.