• Wed. Oct 8th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

காங்கிரஸ் மூப்பனாரின் பிறந்த நாள் விழா..,

BySeenu

Aug 17, 2025

கோவை நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ் மாநில காங்கிரஸ் மூப்பனாரின் பிறந்த நாள் விழாவை விவசாய தினமாக கொண்டாட முடிவெடுத்து அதன் அடிப்படையில் விவசாய கருத்தரங்கம் நடைபெறுகிறது என்றார்.

விவசாயம் சார்ந்த அரசாங்கம் 100% செயல்பட வேண்டும் என கேட்டு கொள்கிறோம் என்று கூறிய அவர் மத்திய அரசு விவசாயம் சார்ந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது, ஆனால் மாநில அரசு விவசாயிகளின் எதிர்பார்ப்பிற்கு ஏற்றவாறு நான்கரை ஆண்டுகள் செயல்படவில்லை விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை அவர்கள் நிறைவேற்றவில்லை என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது என்றார். விவசாயிகளுக்கு இந்த ஆட்சியின் மீது மிகுந்த அதிருப்தி உள்ளது, என்றும் ஆட்சி மாற்றத்திற்கு விவசாயிகள் தயாராக உள்ளனர் என்றார். விவசாயிகளுக்கு தொடர் கோரிக்கைகள் உள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து அரசியல் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்த அவர்,
ஜனநாயக நாட்டில் ஜனநாயகத்தை எதிர்த்து செயல்படுகின்ற வகையில் சுதந்திரம் உள்ளது அதனைத் தான் காங்கிரஸ் கட்சி அனுபவித்துக் கொண்டிருக்கிறது என்றார். தேர்தல் ஆணையம் என்பது கட்சிகளுக்கு அப்பாற்பட்டு மக்களே தேர்ந்தெடுக்கக்கூடிய நிலையை ஏற்படுத்தும் நடுநிலையான ஆணையம் என்றும் தேர்தல் ஆணையத்தின் மீது காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர் என்று கூறிய அவர் இது காங்கிரஸ் கட்சி மற்றும் கூட்டணி கட்சியினர் பலவீனமாக இருப்பதை காட்டுகிறது, தேர்தல் தோல்வியை அவர்கள் உறுதி செய்து கொள்கிறார்கள் அதனை மறைப்பதற்காகவே இவ்வாறு பேசி வருகிறார்கள் என்றார். காங்கிரஸ் கட்சியினரின் இந்த செயல்பாடுகளை சாதாரண வாக்காளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றார்.

அமலாக்கத்துறை சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுகின்ற துறை, மத்திய அரசின் கீழ் இருந்தாலும் அது தனியாக இயங்கக்கூடிய ஒரு துறையாகும் சட்டம் அனைவருக்கும் சமம் என்கின்ற ரீதியில் தான் நாடு சென்று கொண்டிருக்கிறது என்றார்.

ஆளுநர் பற்றி முதலமைச்சர் பேசிவரும் கருத்துக்கள் குறித்தான கேள்விக்கு பதிலளித்த அவர் இந்தியாவில் முக்கிய பொறுப்புகளுக்கு என்று ஒரு மரியாதை உள்ளது, அதனை மக்கள் மதிக்கும் வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், முதல்வரும் ஆளுநர் பற்றி பேசுவதை அதற்கு தகுந்தார் போல் வைத்துக் கொள்வார் என எண்ணுகிறேன் என்றார்.

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிகளான அதிமுக, பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் பல்வேறு ஒத்த கருத்துடைய கூட்டணிகள் மக்களை களத்தில் சந்தித்து வெற்றி கூட்டணியாக வலம் வந்து கொண்டிருக்கிறது என்றார். ஒன்றிணைந்த அதிமுக இனிவரும் காலங்களில் இன்னும் விரிவாக்கப்படும் என அதிமுக செயலாளர் தெரிவித்துள்ளார், அதிமுக பாஜக இணைந்து கூட்டணி சம்பந்தமாக எடுக்கக்கூடிய முடிவுகள் மற்ற கூட்டணி கட்சிகளுக்கு இறுதி முடிவாக இருக்கும் என்றார்.

திமுக தன்னுடைய பயத்தை கூட்டணி கட்சியினரிடம் வெளிப்படுத்த முடியாத நிலையில் மறைமுகமாக அதிமுக மீது அவதூறு கூறுகிறது என்று நான் கருதுவதாக தெரிவித்தார். தூய்மை பணியாளர்களின் போராட்டம் நியாயமான போராட்டம், மனிதாபிமானம் இல்லாமல் தூய்மை பணியாளர்களை இரவோடு இரவாக வெளியே தள்ளியது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றுதூய்மை பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவது அரசாங்கத்தின் கடமை ஆகும் என்றார்.

தவெக மாநாடு குறித்தான கேள்விக்கு புதிய கட்சிகள் மாநாடு நடத்துவதற்கும் கட்சியை வலுப்படுத்துவதற்கும் ஜனநாயகத்தில் உரிமை உள்ளது, அதனை அவர்கள் செய்ய துவங்கி உள்ளார்கள் என்றார். தற்போது தமிழகத்தின் வெற்றி அதிமுக பாஜக கூட்டணி ஆகும், அதனுடைய நோக்கம் திமுக-வை வீழ்த்த வேண்டும் என்பதுதான் எந்தெந்த கட்சிகள் கூட்டணிக்கு வருவார்கள் என்பதை அதிமுக மற்றும் மத்திய பாஜக முடிவு எடுக்கும், தேர்தலுக்கு இன்னும் காலங்கள் உள்ளது அப்பொழுது கூட்டணிகள் இன்னும் விரிவடையும் என்றார்.