• Sat. Nov 15th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

வாக்கு திருட்டு விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி..,

ByT. Balasubramaniyam

Aug 17, 2025

அரியலூர் மாவட்டம், திருமானூர் நகரில்,மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பாளை.எம்.ஆர்.பாலாஜி ஏற்பாட்டில் Stop வாக்கு திருட்டு விழிப்புணர் பிரச்சார நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

ஆளும் பாஜக அரசு ,இந்திய தேர்தல் ஆணையத்தை கை பாவையாக வைத்துக் கொண்டு பெங்களூர் மத்திய தொகுதியில் 1லட்சத்திற்கு மேலான போலி வாக்குகள் சேர்ப்பு மற்றும் பீகாரில் லட்சக்கணக்கான வாக்குகளை நீக்கிய தேர்தல் ஆணையம் மற்றும் பாஜக கூட்டாக இணைந்து போலியாக வாக்காளர்களை சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்ட மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதை பற்றி பொது மக்களிடம் எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் கடைவீதிகள்,பேருந்து நிலையம்,பேருந்துகள் என மக்கள் கூடும் இடங்களில் STOP வாக்கு திருட்டு என ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு அரியலூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பாளை.எம்.ஆர்.பாலாஜி தலைமை தாங்கினார். திருமானூர் வட்டார தலைவர்கள் கங்காதுரை,திருநாவுக்கரசு மற்றும் நகரத் தலைவர் வினோத் குமார் முன்னிலை வகித்தனர்.

இளைஞர் காங்கிரஸ் முன்னாள் மாவட்டத் தலைவர் எம் கே எஸ் புகழ்ராஜ்,மாணவர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் கபிலன்,சிறுபான்மைதுறை மாவட்ட தலைவர் நிக்கோலஸ்ராஜ்,மாவட்ட பொதுச் செயலாளர் சீமான், ஒபிசிமாவட்டத் தலைவர் சங்கர்வேல், எஸ்சி எஸ்டி பிரிவு மாவட்டத் தலைவர் அழகிய மணவாளன் ஏபி சுரேஷ்,கலைபிரிவு மாவட்டத் தலைவர் சண்முகவேல்,திருமானூர் ராஜ்,கதிர் மற்றும் இளைஞர் காங்கிரஸார் பங்கேற்று பிரசுரங்களை வழங்கினர்.முடிவில்திருமானூர் வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவர்பாரதி அனைவருக்கும் நன்றி கூறினார்.