நாகப்பட்டினம் மாவட்டம் பிரதாபரமாபுரம் ஊராட்சியில் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நான்கு வழி சாலை பணிக்காக ஊராட்சி பகுதியில் உள்ள சின்னேரியில் 540 மீட்டர் பரப்பளவில் மண் குவாரி அமைக்க மாவட்ட கனிமவளத்துறை அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர். இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

மணல் குவாரி அமைப்பதால் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறும் என்பதால் மண் எடுக்கக் கூடாது என கிராம மக்கள் கடந்த 13 ஆம் தேதி ஏரியில் மண் எடுக்க வந்த ஜேசிபி உள்ளிட்ட இயந்திரங்களை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று போலிசார் பாதுகாப்போடு மண் அள்ளும் பணியில் ஈடுப்பட்டனர்.

இதனை கண்டித்து இன்று சாலை மறியல் போராட்டம் நடைப்பெறும் என அறிவித்த நிலையில் நேற்று இரவு போராட்ட ஒருங்கிணைப்பாளர்களை வீடு புகுந்து கைது செய்ததாக கூறப்படுகிறது. இதானால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் பிரதாப ராமபுரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிவராசு தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் செருதுர் கிராமத்தில் இருந்து பேரணியாக சென்று கிழக்கு கடற்கரை சாலையில் பிரதாபராமபுரம் கைகாட்டி பகுதியில் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு ஈடுபட்டனர்.
அவர்களிடம் அதிகாரிகள் யாரும் பேச்சு வார்த்தையில் ஈடுபட வராததால் பொதுமக்கள் வேளாங்கண்ணி அருகே கைகாட்டி பகுதியில் நாகை தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலையில் சாலையில் அமர்ந்து தற்போது மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மண் குவாரிக்காண அனுமதி ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள் தெரிவித்துள்ள நிலையில் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளவர்களிடம் கோட்டாட்சியர் அரகநாதன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார். மண் எடுப்பதற்கான அனுமதியை ரத்து செய்துவிட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டுமென பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளதால் பரப்பரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால் இப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு வருகின்றனர். மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியோடு குவாரியில் மண் எடுக்கப்பட்டு வருவதால் மண் அள்ள ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என அதிகாரிகள் வைத்த கோரிக்கையை போராட்டக்கார்கள் ஏற்காததால் தற்போது தொடர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வழியா வந்த கூடுதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷண்ன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருபவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டு வருகிறார்