அரியலூர் மகாசக்தி A/C திரையரங்கில், இன்று காலை, ரஜினி நடித்து வெளிவந்துள்ள கூலி திரைப்படம் முதல் காட்சி ரிலீஸ் செய்யப்பட்டது. முன்னதாக திரையரங்கம் முன்பு 500க்கும் மேற்பட்ட ரஜினி ரசிகர்கள் ,கூலி திரைப்பட ரிலீஸ் கொண்டாடும் விதமாக பட்டாசு வெடித்து , திரைப்படம் காண வந்த ரசிகர்களுக்கு இனிப்புகள் வழங்கி, திரையரங்கம் முன்பு வைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட கட்ட அவுட்டிருக்கு, பாலாபிஷேகம் செய்து கொண்டாடினர்.

இந்நிகழ்வில் அரியலூர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் நிஜாமுதீன், கார்த்திகேயன், ஜி.டி. ஆர்.செந்தில்நாதன்,ஐ பி ஆனந்த், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.







; ?>)
; ?>)
; ?>)