• Thu. Jan 15th, 2026
[smartslider3 slider="9"] Read Now

மாணவர்களின் ஒழுக்கம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

காரைக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களின் ஒழுக்கம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, ஏராளமான மாணவர்கள் பங்கேற்பு.

கொரானா பெருந்தொற்று பரவலை அடுத்து தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் மாணவ மாணவிகள் வீட்டிலிருந்தபடியே இணைய வழியில் கல்வி கற்று வந்தனர்.தற்போது தொற்று குறைந்து பள்ளிகள் திறக்கப் பட்டிருக்கும் நிலையில்,மாணவ மாணவியர்களுக்கு மீண்டும் நேரடி கல்வியில் ஆர்வத்தை கொண்டு வர தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் அணிவகுப்பு நடத்தப்பட்டது.இதில் மாணவர்கள் வகுப்பறையில் நடந்துகொள்ளும் விதம்,தவறாமல் சீருடை அணிவது, கவனமுடன் பாடம் கற்பது,போக்குவரத்து விதிமுறைகள், ஒழுக்க நடவடிக்கைகள் ஆகியவை குறித்து மாணவ, மாணவியர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.