புதுக்கோட்டை அருகே பூங்குடி என்ற கிராமத்தில் பலநூறு ஆண்டுகளாகவும் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாகவும் ஸ்ரீ வெங்கலமுடைய யாள் திருக்கோவில் திகழ்கிறது. இந்த ஆலயத்தில் பூங்குடி வெள்ளனூர் வாகவாசல் வடுகன்பட்டி என பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களது குலதெய்வமாகவும் காவல் தெய்வமாகவும் வழிபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மர்ம நபர்கள் சிலர் வெங்களமுடைய டையார் ஆலயத்தில் உள்ள குதிரைவாகனத்தை உடைத்து சென்றுள்ளனர்.
இதனையடுத்து 10 ஊர் கிராம மக்களும் சேர்ந்து வெள்ளனூர் காவல் நிலையத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு புகார் அளித்துள்ள நிலையில் இதுவரையிலும் அந்த நபர்களை கைது செய்யாத காவல்துறையினரை கண்டித்து இன்று 200க்கும் மேற்பட்ட 10- ஊர் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பு நிலவியது.
அதன் பிறகு காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு மாவட்ட ஆட்சியர் அருணாவிடம் சிலையை உடைத்த குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்தப் புகார் மனு அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.