இந்திய அரசு, எல்ஐசி கட்டுபாட்டில் உள்ள ஐடிபிஐ வங்கி நாடு முழுவதும் செயல்பட்டு கொண்டிருக்கிறது. லட்சகணக்கான வாடிக்கையாளர்களுடன் அதிக லாபத்துடன் இயங்கி வரும் ஐடிபிஐ வங்கியை அயலக வங்கிக்கு தாரை வார்க்கும் முயற்சியில் (விற்பனை செய்வது) அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது.

இதற்கு வங்கி ஊழியர்கள் மற்றும் ஊழியர்கள் சங்கங்கள் கடும் கண்டனங்களையும் எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஐடிபிஐ வங்கியை தனியாருக்கு விற்பனை செய்வதை கைவிட கோரி இந்தியா முழுவதும் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்ட நீதிமன்றம் நீதி உள்ள ஐடிபிஐ வங்கி முன்பு வங்கி ஊழியர்கள் மதுரை ராம்நாடு அனைத்து வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் குமரன் தலைமையில் ஐடிபிஐ வங்கி ஊழியர் சங்க செயலாளர் பெனட் முன்னிலையில் மாவட்ட சங்கத்தை சேர்ந்த டேவிட் காளிதாஸ் ஹரிசேகர் ஐடிபிஐ வங்கி அதிகாரிகள் சங்க தலைவர் சுர்ஜித்பாரதி உட்பட வங்கி ஊழியர்கள் தனியாருக்கு விற்பனை செய்யக்கூடாது, வங்கி எழுத்தர்களுக்கான 5000 பணியிடங்களை நிரப்ப கோரியும் கண்டன கோஷங்களை எழுப்பியபடி ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.