அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மூளை சாவடைந்து உடல் உறுப்புகளை தானம் செய்பவர்களுக்கு பெயர்களை கல்வெட்டில் பதிக்கும் திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும்.
அமைச்சர் மா சுப்பிரமணியன் பேட்டி…

மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னேற்றத்தையும் புதிய முயற்சிகளையும் எடுத்து வருகிறது . உடல் உறுப்பு தானம் வழங்குவதில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக விளங்கும் தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு சமீபத்தில் தேசிய விருது வழங்கியது.
இந்நிலையில் , 45 ஆயிரத்து 861 பேரிடமிருந்து 2025 பிப்ரவரி முதல் ஏப்ரல் ஆகிய மூன்று மாதங்களில் அதிக எண்ணிக்கையிலான உறுப்பு தான உறுதிமொழிகளை பெற்று உலக சாதனை படைத்த கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் முயற்சிக்கு வேர்ல்ட் ரெகார்ட்ஸ் யூனியன் அமைப்பு அதிகாரப்பூர்வமாக சான்று அளித்துள்ளது. இந்த உலக சாதனைக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது .

இதில் தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தொடர்ந்து வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் யூனியன் பிரதிநிதிகள் ஆகிய ஆசிஷ் ரேனாட் மற்றும் சாதனை அதிகாரி ஷரிஃபா ஷனிப் ஆகியோர் எஸ் எம் எஸ் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தருக்கு உலக சாதனைக்கான சான்றிதழை வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா சுப்ரமணியன் ,
சிறுநீரகம் வேண்டி காத்துக்கொண்டிருப்பவர்கள் எண்ணிக்கை 7,487. அதே போல் கல்லீரல் வேண்டி காத்துக் கொண்டிருப்பவர்கள் 470 பேர். சிறுநீரகம் , கல்லீரல் , இதயம் , எலும்புமஞ்சை , தோல் , கண் கருவிழி போன்ற பல்வேறு உடல் உறுப்புகள் வேண்டிய நிலையில் காத்துக் கொண்டிருப்பவர்கள் தமிழ்நாட்டில் பல்லாயிரக்கணக்கானோர் இருந்து கொண்டிருக்கிறார். எனவே இந்த வகையில் அவர்களுக்கு உதவி செய்கிற வகையில் அவர்களுடைய உயிர்களை காப்பாற்றுகின்ற வகையில் ஒரு மகத்தான சேவையை அரசோடு இணைந்து ராமகிருஷ்ணா மருத்துவமனை இன்றைக்கு செய்து கொண்டிருக்கிறது என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஏற்கனவே அவர்கள் கின்னஸ் சாதனை படைத்து உலக சாதனை படைத்து ஒரு மிகப்பெரிய அளவிலான இதில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் முன்னணியில் இருந்து கொண்டிருக்கிறார்கள் மீண்டும் ஒரு உலக சாதனை என்கின்ற வகையில் அவர்கள் படைத்த சாதனையை அவர்களே மிஞ்சுகின்ற வகையில் இன்னைக்கு ஒரு மூன்று மாத காலத்தில் 45861 பேரிடத்திலிருந்து உடல் உறுப்பு தான உறுதிமொழிகளை பதிவு செய்கின்ற அந்த சாதனையை படைத்திருக்கிறார்.

தமிழ்நாடு அரசு குறிப்பாக மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்கள் இன்றைக்கு உடல் உறுப்பு தானம் என்கின்ற இந்த விழிப்புணர்வு தமிழ்நாட்டில் ஏற்படுவதற்கு பல வகைகளில் காரணமாக இருந்து கொண்டிருக்கிறது. ஆறு ஏழு ஆண்டுகளுக்கு முன்னால் நாங்களும் முதல்வரும் அவருடைய துணைவியாரும் அவர்களுடைய காலகட்டத்திற்கு பிறகு அவர்களுடைய உடல்களை உடல் உறுப்பு தானம் செய்ததை பதிவு செய்து நேரடியாக அந்த மருத்துவமனையில் அதற்கான சான்றிதழ் பெற்றதை பத்திரிகைகளில் அனைவருமே பார்த்திருப்பீர்கள்.
அதுமட்டுமல்ல முதலமைச்சராக பொறுப்பேற்றதற்கு பிறகு 2023 செப்டம்பர் 23 அன்று உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதை செய்யப்படும் என்கின்ற அறிவிப்பினை வெளியிட்டார்கள். அறிவிப்பு வெளியிட்டதற்கு பிறகு இன்றைக்கு அதன் மூலம் விழிப்புணர்வு பெற்று ஆன்லைனில் மூலம் 14,300 பேர் உடல் உறுப்பு தானம் செய்வதற்கு இன்றைக்கு தமிழ்நாட்டில் முன்வந்துள்ளார்கள் அது மட்டுமல்ல 2023 செப்டம்பர் 23ஆம் தேதிக்கு பிறகு இதுவரை உடல் உறுப்பு தானம் அத மூளைச்சாவடைந்து உடல் உறுப்பு தானம் செய்தவர்களுடைய எண்ணிக்கை 483 என்பது ஒரு அபரிதமான காலத்தில் 483 பேர் உடலுறுத்தவர்கள் இடத்தில் இருந்து உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டிருக்கும் .
கடந்த ஆண்டு 2024 ஆம் ஆண்டு ஓராண்டில் மட்டும் 868 நபர்களிடமிருந்து உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டு பல உயிர்கள் இன்றைக்கு காப்பாற்றப்பட்டிருக்கிறது. அதனால் தான் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னால் ஒன்றிய அரசின் சார்பில் 24ஆம் ஆண்டு எந்த மாநிலத்தில் அதிக எண்ணிக்கையில் மூளைச்சாவு அடைந்தவர்களிடத்தில் இருந்து உடல் உறுப்பு தானம் பெறப்பட்டிருக்கிறது என்கின்ற வகையில் தமிழ்நாடு 268 மூளைச்சாவது அடைந்தவர்களிடத்திலிருந்து உடல் உறுப்பு தானத்தை பெற்றிருக்கிறது. இது இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவில் தமிழ்நாடு இன்றைக்கு முதலிடத்தில் இருக்கிறது என்கின்ற வகையில் ஒன்றிய அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பெருமதிற்குரிய திரு ஜே பி நந்தா அவர்களின் வாயிலாக தமிழ்நாடு அரசுக்கு குறிப்பாக நம்முடைய மருத்துவர் கோபாலகிருஷ்ணன் அவர்கள் நேரடியாகச் சென்று அவர்களிடத்தில் இருந்து சிறந்த மாநிலத்திற்கான விருதினை பெற்று வந்தார்கள் .இந்த ஆண்டு மட்டுமல்ல கடந்த எட்டு ஆண்டுகளாக தமிழ்நாடு தொடர்ந்து இந்தியாவில் முதல் மாநிலமாக இருந்து கொண்டிருக்கிறது.
2004 ஐந்தாம் தேதி மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்கள் அரசு பிறகு பல்வேறு வகைகளில் இந்த மூலைச் சாவு அடைந்தவர்களிடத்திலிருந்து உடல் உறுப்பு தானங்கள் பெறுவதில் முனைப்பு காட்டப்பட்டது 2022 ஜூலை திங்கள் 31ஆம் தேதி கோவையில் தமிழ்நாட்டில் இருக்கிற அனைத்து அரசு மருத்துவக் கல்லூரியில் முதல்வர்களுடனான ஒரு கூட்டம் நடத்தப்பட்டு அவளுக்கு அதுவரை இந்த உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அல்லாத உறுப்பு மீட்பு மையங்கள் நான் ட்ரான்ஸ்ஃபார்ம் ஆர்கான் வெற்றிவேல் சென்டர்ஸ் உரிமங்கள் வருவதில் இருந்த சிக்கல்கள் களையப்பட்டு அந்த உரிமங்கள் அனைவருக்கும் தரப்பட்டது.
அப்படியே தரப்பட்டதன் விளைவாக இன்றைக்கு தமிழ்நாட்டில் எல்லா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் இன்றைக்கு மிக சிறப்பாக அந்த மூளைச்சாவடைந்தவர்கள் இடத்தில் இருந்து உடல் உறுப்புகளை பெறுவதில் சிக்கல் என்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட வர்கள் அதோடு மட்டுமல்ல அது அரசு பொறுப்பேற்றவுடன் ஆகஸ்ட் 13ஆம் தேதி விடியல் என்கின்ற ஒரு தானியங்கி இணையதளம் செயலியை ஒன்று தொடங்கப்பட்டது.
அந்த செயலி உருவாக்கப்பட்டதற்கு பிறகு வெளிப்படையாகவும் மூப்பின் அடிப்படையில் நோயாளிகளுக்கு உறுப்பு ஒதுக்கீட்டை அரசு இன்னைக்கு உறுதி செய்து ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையை பொறுத்த வரை தமிழ்நாட்டின் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளுக்கும் மூளைச்சாவது சர்டிபிகேஷன் மற்றும் மெயின்டனன்ஸ் குறித்த பயிற்சிகளை தொடர்ச்சியாக வழங்கி வருகிறது. அப்படி வர வழங்கி வருகின்ற காரணத்தினால் இன்றைக்கு எல்லா மருத்துவக் கல்லூரிகளிலும் மூளைச்சாவது திட்டம் என்பது மிகச் சிறப்பாக இன்னைக்கு செயல்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் கூட ஒரு சிறப்பு திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டது. அந்த திட்டம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் மூளை சாவு அடைந்தவர்களுடைய உடலுக்கு மருத்துவமனை உடலுக்கு மருத்துவமனையின் முதல்வர்கள் தலைமையில் ஹானர்வாக் என்று சொல்லப்படும் அரசு மரியாதை என்பது இன்றைக்கு தொடர்ச்சியாக செய்யப்பட்டு கொண்டிருக்கிறது அதில் இதுவரை 483 பேருக்கு அந்த அரசு மரியாதை செலுத்திருக்கும்.
இந்த நிலையில் மீண்டும் கடந்த நிதிநிலை அறிக்கையில் ஒரு மூலச் சாவு அடைந்தவர்களை கௌரவிக்க சிறப்பிக்கிற வகையில் இன்னொரு திட்டமும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தமிழ்நாட்டில இருக்கிற 36 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் அந்த மருத்துவமனையில் யாரெல்லாம் மூளைச்சாவடைந்தவர்கள் உடல் உறுப்பு தானங்களை செய்தார்களோ அவருடைய பெயர்களை கல்வெட்டில் பதிவு செய்து வைக்கிற ஒரு முயற்சி மிக விரைவில் தொடங்கப்படமிருக்கிறது.
வால் ஆப் ஆனர் என்கின்ற வகையில் . ஹானர் வாக் என்பது ஏற்கனவே நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஒன்று . வாலாபாக் ஹானர் என்கின்ற வகையில் கல்வெட்டுகளில் அவருடைய பெயர்களை மருத்துவமனைகளில் பதிவு வைக்கிற அந்த நிகழ்ச்சி மிக விரைவில் நடத்தப்படவிருக்கிறது . ஒன்றரை மாத கால இடைவெளியில் நம்முடைய ராஜீவ் காந்தி ஹாஸ்பிட்டலுக்கு மருத்துவமனையில் இருந்து அந்த திட்டம் என்பது இன்றைக்கு தொடங்கி வைக்கப்பட இருக்கிறது இப்படி உடல் உறுப்பு தானங்கள் பெறுவதில் அரசு முனைப்பு காட்டிக்கொண்டு இருக்கிறது அதற்காக கற்றுக் கொண்டிருக்கிறது .
என்றாலும் ராமகிருஷ்ணா மருத்துவமனை என்பது எந்த அளவுக்கான ஒரு விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்தி ஒரு மிகப்பெரிய அளவிலான இன்றைக்கு ஒரு மாற்றத்திற்கு வித்திட்டு இருக்கிறது எனவே இந்த சிறந்த முயற்சியை மேற்கொண்டு இவ்வளவு பெரிய சாதனையை படைத்திருக்கிற ராமகிருஷ்ணா மருத்துவமனை என்பது மருத்துவத்துறை வரலாற்றில் ஒரு யாராலும் ஒரு மறுக்கப்பட கூடாது மறுக்க முடியாத ஒரு சொல் ராமகிருஷ்ணா மருத்துவமனை என்கின்ற வகையில் மிக சிறந்த சேவையை ஆற்றி இருக்கிறது அதற்காக இன்றைக்கு உலக சாதனையும் பெற்றிருக்கிறது.
தொடர்ந்து பல்வேறு சாதனைகளை அவர்கள் ஆற்றிட வேண்டும் இன்னமும் ஏராளமான உலக சாதனைகளை அவர்கள் பெறவேண்டும். இதன் மூலம் தமிழ்நாட்டில் இருக்கிற மக்கள் மட்டும் அல்ல அகில இந்திய அளவிலான மக்களுக்கும் உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு 100% ஏற்பட ராமகிருஷ்ண மருத்துவமனை முயன்று கொண்டிருக்கிறது அவர்கள் வெற்றி பெற வேண்டும்.