இராஜபாளையம் அருகே சேத்தூர் பேரூராட்சியில் 5 கோடியை 96லட்சம் மதிப்பில் குளிர்சாதன வசதியுடன் திருமண மண்டபம் கட்ட வருவாய் துறை அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் பேரூராட்சி பகுதியில் இப்பகுதி மக்களின் நலனுக்காக குளிர்சாதன வசதியுடன் கூடிய திருமண மண்டபம் கட்டுவதற்காக இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் முயற்சியினால் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து 1 கோடியும் கலைஞர் நகர் புறம் மேம்பாட்டு திட்டத்தில் இருந்து 3 கோடியே 46 லட்ச ரூபாயும் பொது நிதியிலிருந்து 1 கோடியே 50 லட்சம் என மொத்தம் 5 கோடியே 96 லட்சம் மதிப்பீட்டில் கட்டுமான பணியின் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் .விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா . தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார் இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் இராஜபாளையம் நகர் மன்ற தலைவி பவித்ரா ஷ்யாம் முன்னாள் எம்பி தனுஷ் குமார் சேத்தூர் பேரூராட்சி தலைவர் பாலசுப்பிரமணியம் உள்ளிடோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் பேசும்போது தேர்தல் நெருங்கிவிட்டது. ஆகையால் தான் இது போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றோம். மக்கள் எங்களை பார்த்து நீங்கள் என்ன செய்தீர்கள் என்று கேட்டால் மருத்துவமனை பாலம் கட்டுவது இது போன்ற கல்யாண மண்டபம் கட்டுவது போன்ற பணிகள் நாங்கள் செய்திருக்கிறோம் என்று கூறி உங்களிடம் ஓட்டு கேட்க முடியும். ஆகையால் தான் இது போன்ற பணிகளை நாங்கள் செய்து வருகின்றோம் என கூறினார்.