• Sat. Nov 15th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாபெரும் ரத்ததான முகாம்..,

ByT. Balasubramaniyam

Aug 10, 2025

அரியலூர் ஏ.ஒய்.எம் மினி ஹாலில், 79 ஆம் இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு,
அரியலூர் மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாபெரும் ரத்ததான முகாம் நேற்று நடைபெற்றது.அரியலூர் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை குருதி வங்கி மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அரியலூர் மாவட்ட நிர்வாகிகள் இணைந்து நடத்திய இம்முகாமி னை , தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அரியலூர் மாவட்டத் தலைவர் சபியுல்லா தலைமையேற்று தொடங்கி வைத்தார்.

தவ்ஹீத் ஜமாஅத் அரியலூர் மாவட்ட செயலாளர் முஜ்ப்புர் ரஹ்மான் முன்னிலை வகித்தார்.மாவட்ட துணைத் தலைவர் சம்சுதீன் முகாமில் கலந்து கொண்ட அனைவரையும்வரவேற்றார். அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை குருதி வங்கி தலைவர் மருத்துவர் சந்திரசேகரன் தலைமையிலான மருத்துவ குழுவினரிடம், 72 மேற்பட்ட தன்னார்வலர்கள் முகாமில் கலந்துகொண்டு குருதி தானம் செய்தனர்.

இந்நிகழ்வில்தமிழ்நாடுதவ்ஹீத் ஜமாஅத்தின் அரியலூர் மாவட்ட துணை செயலாளர் காதர் பாட்ஷா,மாவட்டத் துணைச் செயலாளர் பஷீர் பாய்,அரியலூர் நகர கிளை தலைவர் இலியாஸ் முகமத்,நகரகிளைசெயலாளர்அயூப்க்கான்,நகரகிளை பொருளாளர் ஷேக் அலாவுதீன்,மருத்துவ அணி நிர்வாகி அஜ்மல் கான்,உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.முகாம் முடிவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அரியலூர் மாவட்ட பொருளாளர் சையத் ரஷீத் அனைவருக்கும் நன்றி கூறினார்.