• Mon. Nov 17th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

சிலைகளை செய்யும் பணியில் நற்பணி மன்றத்தினர்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் சார்பில் 38வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்ற தலைவர் ராமராஜ் ஏற்பாட்டில் மும்பையில் இருந்து வரவழைக்கப்பட்ட சிற்பக் கலைஞர்களைக் கொண்டு லட்சக்கணக்கான பொருட்கள் செலவில் விநாயகர் சிலைகள் மிகச் சிறப்பாக சிலைகள் செய்யும் பணி நடைபெற்று வருகிறது .

வித்தியாசமான வடிவமைப்பில் அருள் பொருள் அருளும் கணபதி. மங்கல கணபதி. மற்றும் விஜய கணபதி . ஆனந்த சயன கணபதி. ஆனந்த கணபதி என பல்வேறு வடிவத்தில் விநாயகர் சிலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது இந்த பணிகள் நிறைவுற்று வருகின்ற 18ஆம் தேதி தருமபுரம் தெருவில் சிலையில் வைக்கப்பட்டு தினந்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் அன்னதானம் நடைபெறும் அதைத் தொடர்ந்து விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும்.