கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா அருகே சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 202 – வது நினைவு தினத்தை முன்னிட்டு திமுக கூட்டணி கட்சியான கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் மேற்கு மாவட்ட செயலாளர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக இருசக்கர வாகனம் மற்றும் காரில் வந்த கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் பொதுமக்களுக்கு இடையூறாக வாகனங்களை இயக்கிய நபர்களுக்கும் போலீஸாருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
