தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில். திமுகவின் கூட்டணியில் தொடர்ந்து காங்கிரஸ் அங்கம் வகித்த போதும். காங்கிரஸ் யின் தனித்தன்மையை கட்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்க, கிராமங்கள் தோறும் கிராம காங்கிரஸ் கட்சியின் கமிட்டி அமைக்கும் பணியில் வேகம் காட்டிவரும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை இதற்கு உடன் இருந்து ஆலோசனை நல்கும் மூத்த காங்கிரஸ் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆற்றி வரும் பணிகள். தமிழக காங்கிரஸ் கட்சியின் அனைத்து பிரிவுகளிலும் புது நீர் பாய்ச்சலில் புது உற்சாகம் ஊற்றெடுக்கும் நிலையில்.

தமிழ் நாடு இளைஞர் காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் லெனின் பிரசாத்தை அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளராக நியமித்து, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முதன்மை பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவிப்பு வெளியான அதே நேரத்தில்,

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர்களாக தமிழ் நாட்டைச் சேர்ந்த சிந்துஜா, ஷூநிதி என்ற இரண்டு இளம் பெண்கள் நியமனம் செய்யப்பட்டதை. குமரி மாவட்டத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியின் அனைத்து பிரிவுகளிலும் இருந்து மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.